ஊரக சுகாதாரத்தில் தமிழ்நாடு 3ம் இடம் - குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுபெற்ற அமைச்சர்

ஊரக சுகாதாரத்தில் தமிழ்நாடு 3ம் இடம் - குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுபெற்ற அமைச்சர்
ஊரக சுகாதாரத்தில் தமிழ்நாடு 3ம் இடம் - குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுபெற்ற அமைச்சர்

ஊரக சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் வழங்கிய விருதை, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார்.

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை சார்பில் டெல்லி விக்யான் பவனில் தூய்மை இந்தியா தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா கிராமப்புறம், ஜல்ஜீவன் மிஷன் ஆகிய இரண்டு முக்கியத் திட்டங்களை நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த இரண்டு முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்மாதிரியான முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக துறை சார்பில் பல்வேறு போட்டிகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்தப் போட்டிகள் மற்றும் பிரச்சாரங்களில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று மத்திய ஜல்சக்திதுறை அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் 2021-22-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தை பிடித்துள்ளது. இதற்காக குடியரசுத் தலைவரால் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை புதுடெல்லியில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மை செயலர் அமுதா ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-இன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சுமார் 50 லட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில் 413 சமுதாய சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 12,525 கிராம ஊராட்சிகள் அனைத்தும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை எய்தின.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com