\
ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Published on: 

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தம்முடைய ஆதரவை தெரிவித்ததாகவும், இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - பிரேமலதாவின் 31-வது திருமண நாளையொட்டி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விஜயகாந்த், பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும், அதிமுக கூட்டணியில்தான் இந்த நிமிடம் வரை இருப்பதாகவும் குறிப்பிட்டார். தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் பிரேமலதா வலியுறுத்தினார்.