premalatha vijayakanthpt desk
தமிழ்நாடு
"காணாம தேடுறோம் கேப்டன" - அஞ்சலி இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!
மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பாடலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.
செய்தியாளர்: பிரதோஷ்
கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக "காணாம தேடுறோம் கேப்டன" இசை ஆல்பத்தை, விஜயகாந்த் மறைந்து 48 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இன்று கேப்டன் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.
குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி தயாரித்துள்ளார்.
vijayakanthpt desk
இந்த நினைவு அஞ்சலி பாடலை, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சேர்ந்த ஜமால் உசேன் ஆகியோர் உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டது.