\
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததா திமுக ? விளக்கம் கேட்கும் பிரேமலதா

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததா திமுக ? விளக்கம் கேட்கும் பிரேமலதா

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததா திமுக ? விளக்கம் கேட்கும் பிரேமலதா
Published on

தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வரும் தகவலுக்கு மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பழனி மலைக்கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். அதிமுக -தேமுதிக கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே  நீட்தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள். தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடிரூபாய் வழங்கியதாக வரும் தகவலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கம் அளிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com