காதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா

காதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா

காதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா
Published on

ஆம்பூர் அருகே காதலன் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் வீட்டின் முன்பாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேணுகா. இவர் தாய், தந்தை இல்லாதததால் தனது சகோதரி வீட்டில் இருந்து வருகிறார். ரேணுகா அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இரண்டரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, திருமணம் செய்வதாக கூறி தன்னை ஜானகி ராமன் ஏமாற்றிவிட்டதாக தன்னுடைய உறவினர்களுடன் சென்று ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ரேணுகா மார்ச் மாதம் 3ம் தேதி புகார் கொடுத்தார். ‘வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஜானகி ராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். கர்ப்பமாக உள்ளதை கூறி திருமணம் செய்யுமாறு பல முறை வலியுறுத்தினேன். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் தன்னுடைய தாய் மற்றும் தங்கை என்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்’ என ரேணுகா கூறியுள்ளர். 

புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி விசாரிப்பதாக கூறி பலமுறை இவர்களை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இரண்டு மாத காலமாக இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ரேணுகா வீட்டு தரப்பினர் கூறுகின்றனர். 

பின்னர், ரேணுகாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று ஜானகிராமனை கைது செய்யும்படி வலியுறுத்தினர். அப்போது, ‘இதற்கான வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் நீதி மன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்’ என ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி கூறியதாக தெரிகிறது.  இதை அறிந்த ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஜானகிராமன் முன்ஜாமீன் பெற்று விட்டதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஜானகிராமன் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் சென்று, ரேணுகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தர்ணா போராட்டத்தை அறிந்த, காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். 

அப்போது, இதே வீட்டில் பலமுறை தன்னை ஜானகிராமன் பலாத்காரம் செய்ததாகவும் அவரை தனக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கூறி போலீசாரின் காலில் விழுந்து ரேணுகா கதறி அழுதார். இந்தக் காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு ஜானகிராமன் இல்லாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com