செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறையன்பு ஆய்வு - சராமரி கேள்வியெழுப்பிய கர்ப்பிணிகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறையன்பு ஆய்வு - சராமரி கேள்வியெழுப்பிய கர்ப்பிணிகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறையன்பு ஆய்வு - சராமரி கேள்வியெழுப்பிய கர்ப்பிணிகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்புவிடம் சரமாரியாக கேள்விகளை தாய்மார்கள் முன்வைத்தனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை, செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள ஜே சி கே நகர் பூங்கா, புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சித்த யோகா மையம், அரசு தலைமை மருத்துவமனை, உள்ளிட்ட பகுதிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரொனா சிகிச்சை மையம், அவசர சிகிச்சைமையம் மற்றும் பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கழிவறை, படுக்கை உள்ளிட்ட எந்த வசதியும் இங்கு இல்லை; கொசுத்தொல்லை காரணமாக குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

எத்தனை முறை புகார் அளித்தாலும் அதன்மீது நடவடிக்கை இல்லை என கூறி தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் புகார் அளித்து மட்டுமின்றி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com