தமிழ்நாடு
மதுரையில் கர்ப்பிணிக்கு கொரோனா: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த 30 கர்ப்பிணிகளுக்கு சோதனை
மதுரையில் கர்ப்பிணிக்கு கொரோனா: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த 30 கர்ப்பிணிகளுக்கு சோதனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சமூக பரவல் ஏதும் ஏற்பட்டுள்ளதா என அந்த கர்ப்பிணி பெண் மாதாந்திர பரிசோதனைக்காக சென்ற தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இருமாதங்களில் பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் அடுத்த சில வாரங்களில் பிரசவம் ஆக போகும் கர்ப்பிணிகள் என முதற்கட்டமாக சுமார் 30 கர்ப்பிணி பெண்களுக்கு இன்று தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

