\
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி மாயம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி மாயம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி மாயம்
Published on

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி திடீரென காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிக்கு கடந்த 4 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனது. மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கர்ப்பிணி காணாமல் போயுள்ளார். ஊழியர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. முகவரியை வைத்து காவல்துறையினர் அந்த கர்ப்பிணியை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com