\
பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்
Published on

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நல்ல தண்ணீரில்தான் டெங்குவை உண்டாக்கும் கொசுக்கள் உருவாவதால் அதுகுறித்த விழிப்புணர்வுகள், துண்டு பிரசுரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க குளோரின் தெளிப்பு மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான ஆய்வு கூட்டமும் நடைபெற்றுள்ளது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com