சென்னையில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்குகிறார் பிரணாப்

சென்னையில் விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்குகிறார் பிரணாப்
Published on

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் வீரர்களுக்கு இன்று விருது வழங்கி கவுரவிக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு 8 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சென்னை வந்தார். அவரை, விமான நிலையத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். தாம்பரம் விமானப்படை தளத்தில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர், வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். பின்னர், அடையாறில் நடைபெறும் இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று பிற்பகலில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு புறப்படுகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com