தமிழ்நாடு
தீ விபத்து: உயிரை பணயம் வைத்த காவலருக்கு பாராட்டு
தீ விபத்து: உயிரை பணயம் வைத்த காவலருக்கு பாராட்டு
சென்னை அமைந்தகரையில், உயிரை பணயம் வைத்து தீ விபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பொன்னுவேல் பிள்ளை தோட்டம், எம்எம் காலனி ஏ பிளாக் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து வந்த அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், தனது உயிரை பணயம் வைத்து, தீ பிடித்த சிலிண்டரை வெளியே இழுத்து வந்து தீயை முழுவதுமாக அணைத்தார். சிலிண்டர் வெடித்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், காவலர் சரவணனை காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.