தற்கொலைக்கு முன் மதிப்பெண் கேட்டு பிரதீபா எழுதிய கடிதம் வெளியானது..!

தற்கொலைக்கு முன் மதிப்பெண் கேட்டு பிரதீபா எழுதிய கடிதம் வெளியானது..!
தற்கொலைக்கு முன் மதிப்பெண் கேட்டு பிரதீபா எழுதிய கடிதம் வெளியானது..!

தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவி பிரதீபா, 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், அதற்கு மதிப்பெண்கள் கேட்டு விண்ணப்பிப்பதற்காக கடிதம் எழுதியிருந்தது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்த பிரதீபா, பத்தாம் வகுப்பின் போது அரசு பள்ளியில் படித்து, பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்துவப் படிப்பு கனவை உணர்ந்த பெற்றோர் வறுமையிலும், மேல்நிலைப் பள்ளி படிப்பிற்காக தனியார் பள்ளியில் சேர்த்தனர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த பிரதீபா, 12-ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார்.  இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பிரதீபா தோல்வி அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரதீபா அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன் பிரதீபா மதிப்பெண் கேட்டு விண்ணப்பிப்பதற்காக எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. கடிதத்தில் பிரதீபா  “ நான் 2018 மே 6-ம் தேதி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர். தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருந்ததால் அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com