தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கத் தவறினால் நிலைமையை சமாளிக்க முடியாது  - பிரப்தீப் கவுர்

தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கத் தவறினால் நிலைமையை சமாளிக்க முடியாது  - பிரப்தீப் கவுர்
தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கத் தவறினால் நிலைமையை சமாளிக்க முடியாது  - பிரப்தீப் கவுர்

தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கத் தவறினால் சுகாதார அமைப்புகளால் நிலைமையை சமாளிக்க முடியாது என எச்சரித்துள்ளார் பொது சுகாதார நிபுணர் டாக்டர்.பிரப்தீப் கவுர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையாக வேகமெடுத்து அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,711 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் தற்போது 79,804 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிவேகமாக உருவெடுத்துள்ள கொரோனா பரவலை குறைக்கத் தவறினால் சுகாதார அமைப்புகளால் நிலைமையை சமாளிக்க முடியாது என எச்சரித்துள்ளார், பொது சுகாதார நிபுணரான டாக்டர்.பிரப்தீப் கவுர். 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tamil Nadu <a href="https://twitter.com/hashtag/Covid19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Covid19</a> cases have been growing at an exponential pace for nearly 3 weeks. It is impossible for the health system to cope if fail to slow down. We must escalate the restrictions. People should cooperate by wearing ? and avoiding all non essential activities <a href="https://t.co/IvI3EXspBa">pic.twitter.com/IvI3EXspBa</a></p>&mdash; Prabhdeep Kaur (@kprabhdeep) <a href="https://twitter.com/kprabhdeep/status/1384566770506244099?ref_src=twsrc%5Etfw">April 20, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதை குறைக்கத் தவறினால் சுகாதார அமைப்புகளால் நிலைமையை சமாளிப்பது என்பது சாத்தியமில்லை. நாம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, அத்தியாவசியமற்ற அனைத்து செயல்களையும் தவிர்த்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com