\
பிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்

பிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்

பிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்
Published on

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கொண்டாடினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளை வழி நடத்தியவர் பிரபாகரன். இவர் 2009ஆம் ஆண்டு போரின் போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். இருப்பினும் இவரது ஆதரவாளர்கள் சிலர் இவர் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறிவருகின்றனர்.

இவரது பிறந்த நாளை, தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாமளவன் ஆகியோர் தமது அலுவலகங்களில் இன்று கேக் வெட்டி கொண்டாடினர். இதேபோன்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அத்துடன் வெளிநாடுகளிலும் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com