இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி

இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி

இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி
Published on

சென்னையில் மின்சாரம்  துண்டிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 390 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இரவில் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மழைநீர் வடிய வடிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும் என்றும்  மின்விநியோகம் தொடர்பாக அவசர தொடர்பு எண்களை அழைக்கலாம் என்றும் தங்கமணி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com