கஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்!

கஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்!

கஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்!
Published on

கஜா புயலில் சிக்கி லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில், பனை மரங்கள் மட்டும் கம்பீரமாக நிற்கின்றன. பனை மரங்களை அதிகளவில் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

திருவாரூர் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர் என மாவட்டத்தின் பல இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தென்னை, மா, பலா, வாழை என லட்சக்கணக்கான மரங்களை கஜா புயல் சாய்த்துவிட்டது. பெரும் துயரத்தில் சிறு ஆறுதல் போல், பனை மரங்களுக்கு ஏதும் ஆகவில்லை. 

புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு. அப்படி சங்க காலம் முதல் நம்மோடு பயணிக்கும் 'பனை மரம்' பூலோகத்து கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.  கஜா புயலை தாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது பனை மரம். பனை மரத்தின் வேர் அதிக ஆழத்திற்குச் செல்வதே இதற்கு காரணம். எப்பேர்பட்ட புயலையும் தாங்கும் வலிமை கொண்டது பனைமரம். ஆற்றின் கரையையும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளின் கரைகளையும் வலுப்படுத்த அங்கு பனைமரம் நடப்பட்டிருப்பதை பார்க்கலாம். வெள்ளப்பெருக்கின் போது வயலில் இருக்கும் வரப்புகள் ‌உடையாமல் காப்பதும் பனை மரங்களே. அதுமட்டுமின்றி பனை மரத்தின் நுனி முதல் அடி வரை அனைத்தும் பயன் தரக்கூடியவை.

பனை தமிழகத்தின் மாநில மரம். தமிழுக்கும் தமிழர்களுக்கும் பனை மரங்கள் பல தொண்டுகளை செய்திருக்கின்றன. பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனை விசிறி என பனை பொருள்களை அதிகளவில் பயன்படுத்தி, பனைமரத்தை காத்தால், அது நம்மை காக்கும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com