கன்னியாகுமரியில் மின்சாரம் துண்டிப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: அதிகாரி தகவல்

கன்னியாகுமரியில் மின்சாரம் துண்டிப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: அதிகாரி தகவல்

கன்னியாகுமரியில் மின்சாரம் துண்டிப்பு 3 நாட்களில் சரி செய்யப்படும்: அதிகாரி தகவல்
Published on

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம் 3 நாட்களுக்குள் முழுவதுமாக சரிசெய்யப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், 2 மின் துறை இயக்குநர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள  ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 

தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்க வைக்க 16 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1044 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சத்யகோபால் கூறினார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் காரணமாக முறிந்து விழுந்த 515 மரங்களில் 200 மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டதாகவும் அவ‌ர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com