தமிழ்நாடு
சென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்வெட்டு - மக்கள் அவதி
சென்னை அரும்பாக்கம் பகுதியில் மின்வெட்டு - மக்கள் அவதி
சென்னை அரும்பாக்கம் பகுதியில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையின் பல இடங்களில் சமீப காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சுமார் அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். ஏற்கெனவே வெயிலின் தாக்கமும் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இதனிடையே அடிக்கடி நிகழும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் அரைமணி நேரம் தாண்டியும் மின்சார விநியோகம் சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு சென்னை மக்களுக்கு தற்போது ஒரு பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது என பலரும் கருதுகின்றனர்.