விருத்தாசலம் நகர் பகுதியில் மின் தடைக்கான காரணம் தெரியாமல் ஒரு மணி நேரமாக மின்சார ஊழியர்கள் சுற்றித்திரிந்த நிலையில், இறுதியில் அணில்கள் தான் மின் தடைக்கு காரணம் என்பது தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் அணில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மரத்திலிருந்த மின் பாதையில் அணில்கள் தாவி விளையாடும் போதும் மின்சாரம் தாக்கி பலத்த சத்தத்துடன் வெடித்தல் அணி கருகியது. இந்த நிலையில் மின்சாரம் பெரியார் நகர் ,தெற்கு பெரியார் நகர், கடலூர் சாலை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரியாமல் மின் பாதையை மின்சார ஊழியர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது கருகிய நிலையில் மின் பாதையில் அணில் கருகிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதனை அப்புறப்படுத்தி, மின் பாதை அருகே உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர் பிறகு குடியிருப்பு பகுதிகளுக்கு ஒரு மணி நேரம் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டது.
அதேபோல் இன்று இரண்டு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம் பகுதிகளில் அணில்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.