கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு - தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் 10 ஆம் கட்ட அகழாய்வில் தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஒடு கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
பானை ஒடு
பானை ஒடுpt desk

செய்தியாளர்: R.சௌந்திரநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வுpt desk

இரு குழிகளும் 2 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பானை ஒடு
5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல் நாளில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளதாக தகவல்

முன்னதாக நேற்று முன்தினம் சென்னானூர் அகழாய்வில், உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இக்கருவி 53 செ.மீ ஆழத்தில், நீளம் 6 செ.மீ மற்றும் அகலம் 4 செ.மீ கொண்டு காணப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். தொடர்ந்து கிடைக்கப்பெரும் இவையாவும், ஆய்வாளர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com