ரூபாய் நோட்டுகள் குறித்த சுவரொட்டிகள்: பதற்றத்தில் ஒசூர் மக்கள்
ஓசூரை அடுத்த சூளகிரியில் ஒட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்த சுவர் ஒட்டிகளால் பொது மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரடுத்த சூளகிரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது இந்த சுவரெட்டியில் 500 மற்றும் 2000 மொத்த தொகைகளை 50 ரூபாயாக மாற்றி கொள்ளுங்கள் என்ற வாசகத்தோடு 50, 500, 2000 நோட்டுக்களின் படங்கள் போட்டு பொதுமக்கள் கூடும் இடங்களான பஜார் வீதி, பேருந்து நிலையம், இராயக்கோட்டை சாலை மேம்பாலம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, அரசு அலுவலகங்கள், மருத்துவமணை, என பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
மேலும் மீண்டும் பணமதிப்பிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பதற்றத்துடன் பார்த்து சென்றனர். இந்த சுவரொட்டியை யார், எதற்காக, ஒட்டினார்கள் என்பதும் அல்லது எதேனும் விளம்பரமா என்பது மர்மமாக உள்ளது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.