\
“மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேணாம்ன்னு சொல்லமாட்டாங்க”- அமமுக பெண் வேட்பாளரின் போஸ்டர்

“மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேணாம்ன்னு சொல்லமாட்டாங்க”- அமமுக பெண் வேட்பாளரின் போஸ்டர்

“மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேணாம்ன்னு சொல்லமாட்டாங்க”- அமமுக பெண் வேட்பாளரின் போஸ்டர்
Published on
“மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..! So குக்கருக்கு ஓட்டு போடுங்க..!” என பெண் வேட்பாளரொருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் குறித்து பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்தநிலையில் மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ள பெண் வேட்பாளர் பாத்திமா பீவி வாக்காளர்களை கவருவதற்காக சுவாரஸ்யமான போஸ்டரொன்றை ஒட்டியுள்ளார்.
அதில் "மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. So குக்கருக்கு ஓட்டு போடுங்க" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர்களை 61வது வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் அவர். இது அப்பகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com