தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா: மூடப்பட்ட அலுவலகம்
சென்னை சென்று திரும்பிய கோவில்பட்டி தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த தபால் அலுவகத்தினை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள தனுஷ்கோடியாபுரம் தெருவினை சேர்ந்த 56 வயது தபால் நிலைய ஊழியர் சென்னையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கடந்த 7-ந்தேதி கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறையினர் நேற்று அரை தனிமைப்படுத்தி சளி மற்றும் ரத்த பரிசோதனை எடுத்துள்ளனர். இதில் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சென்னைக்கு சென்று விட்டு வந்து வேலைக்கு சென்றதால் அவருடன் பணியாற்றிய 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர் பணிபுரிந்த துணை தபால் அலுவலகத்தினை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.