பதக்கம் வென்ற மீராபாய் சானு: வாழ்த்து தந்தி அனுப்ப தனி கவுன்ட்டர் திறந்த வேலூர் தபால்துறை

பதக்கம் வென்ற மீராபாய் சானு: வாழ்த்து தந்தி அனுப்ப தனி கவுன்ட்டர் திறந்த வேலூர் தபால்துறை
பதக்கம் வென்ற மீராபாய் சானு: வாழ்த்து தந்தி அனுப்ப தனி கவுன்ட்டர் திறந்த வேலூர் தபால்துறை

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்று நாட்டிற்க்கு பெருமை தேடி தந்த மீராபாய் சானுவுக்கு, வேலூர் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு கவுன்ட்டர் மூலம் வாழ்த்து அட்டை அனுப்பி வருகின்றனர் அப்பகுதி பொது மக்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் 26 வயதான மீராபாய் சானு, வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்க்கு பெருமை தேடி தந்துள்ளார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அப்படி வேலூரில் உள்ள மக்களும் மீராபாய் சானுவுக்கு பாராட்டு தெரிவிக்க, தபால் நிலைய அலுவலகத்தில் வாய்ப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், மீராபாய் சானுவுக்கு வாழ்த்து சொல்வதற்கென்றே தனி கவுன்ட்டரொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கவுன்ட்டரில் இருந்து ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு நேரடியாக வாழ்த்துத் தந்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்து தந்தி அனுப்புபவர்களின் முகவரி மற்றும் அதற்கான கட்டணம் ரூ.10 வசூலிக்கப்பட்டு அவர்களுடைய பெயரில் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. உடன் வாழ்த்து செய்தி அனுப்பும் பொது மக்களின் செல்போன் எண்ணுக்கு, தந்தி அனுப்பிவைக்கப்பட்டதாக ஒரு குருஞ்செய்தியும்  அனுப்பி வைக்கப்படுகிறது.

இன்று முதல் (29.07.2021) தொடர்ந்து 3 நாட்கள் (ஜூலை 29, 30, 31) என வரும் சனிக்கிழமை வரை இந்த சிறப்பு கவுன்ட்டர் செயல்படும் என தபால் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று சுமார் 580-க்கும் மேற்பட்டோர் மீராபாய் சானுவை வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளனர்.

- ச.குமரவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com