தமிழகத்தில் தபால்நிலைய சேமிப்பு கணக்கு அதிகரிப்பு
தமிழகத்தில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 19 லட்சம் பேர், சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளதாக சென்னை மண்டல தலைமை அஞ்சல்துறை தலைவர் ராதிகா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தபால் நிலையங்களில், ஐந்தரை லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. தபால் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 50 ரூபாய் இருந்தால் போதுமானது என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். ஆனால் வங்கிகளில் ஐந்தாயிரம் ரூபாய் இருக்க வேண்டும். ஏடிஎம் வசதி, பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு இல்லை, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 50 ரூபாய் வைத்திருந்தால் போதும் உள்ளிட்ட வசதிகள் காரணமாக, தபால் சேமிப்பு கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் ராதிகா சக்ரவர்த்தி கூறியுள்ளார். செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 14 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, இணையதள பரிமாற்றம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தபாய் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.