பிரதீப் ஜான்முகநூல்
தமிழ்நாடு
மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு! – பிரதீப் ஜான்
தென் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தென் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். அதேவேளையில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை குறையும் என்றும் தெரிவித்திருக்கிறார். இம்மாதத்தின் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் மழை குறையும் என்றும், ஓரிரு முறை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மழை பெய்யும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

