தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

