தஷ்வந்தை தூக்கிலிட வேண்டும்: சிறுமியின் தந்தை விருப்பம்

தஷ்வந்தை தூக்கிலிட வேண்டும்: சிறுமியின் தந்தை விருப்பம்

தஷ்வந்தை தூக்கிலிட வேண்டும்: சிறுமியின் தந்தை விருப்பம்
Published on

கொலை செய்யப்பட்ட போரூர் சிறுமியின் தந்தை  தனது மகளின் வழக்கு குறித்தும் குற்றவாளிக்கு வழங்க வேண்டிய தண்டனைக்கு குறித்தும் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சிறுமியின் வீட்டின் அருகில் வசித்துவந்த தஷ்வந்த் என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.

தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறுமி  கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிறுமியின் தந்தையை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் “கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com