\
நாகை ஆட்சியரை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்‌கள்

நாகை ஆட்சியரை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்‌கள்

நாகை ஆட்சியரை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்‌கள்
Published on

நாகை மாவட்டம் பொறையாரில் இடிந்துவிழுந்த பேருந்து பணிமனையை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரை, போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

தொமுச, சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷின் காரை வழிமறித்தனர். அவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் வேண்டுகோள் விடுத்தனர். ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பொறையார் பணிமனை கட்டட விபத்தைத் தொடர்ந்து பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8 பணியாளர்கள் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொறையார், மயிலாடுதுறை ஆகிய பணிமனைகளிலிருந்து காலை முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com