Pope Francis died on Monday at the age of 88 the Vatican said in a video statement
போப் பிரான்சிஸ்முகநூல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்.
Published on

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க போப் பிரான்சிஸ் காலமானார். போப் பிரான்சிஸ் மறைவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com