என்னதான் ஆச்சு..?: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..!

என்னதான் ஆச்சு..?: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..!
என்னதான் ஆச்சு..?: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..!

ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோனிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளும் போர்டபிளிட்டி வசதியும் இருந்ததால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது விரும்பிய நெட்வொர்கிற்கு மாறினர். மாறியும் வருகின்றனர். அவ்வாறு மாறியவர்களில் அதிகப்படியோனோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடோபோனைத் தான்.

இதனிடையே  நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையும் நேற்று சரிவர கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். முதலில் வடஇந்திய ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இருந்த இந்தப் பிரச்னை தென் இந்தியாவிலும் நேற்று தொடர்ந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எரிச்சலடைந்து சமூகவலைத்தளங்களில் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர். இதனிடையே புகாருக்கு விளக்கம் கொடுத்த ஏர்டெல், “சிரமத்திற்கு வருந்துகிறோம். சில இடங்களில் பிரச்னை இருந்தது உண்மைதான். தற்போது மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைலை சுவிட் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்யுங்கள் ” என தெரிவித்திருந்தது.

ஏர்செல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் வோடோஃபோன் வாடிக்கையாளர்கள் நேற்றுவரை நிம்மதியில் இருந்தனர். ஏர்செல்லில் இருந்து சரியான நெட்வொர்க்கான வோடோஃபோனுக்கு மாறியுள்ளதாகவும் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வோடோஃபோனிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று பல இடங்களில் வோடோஃபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. நெட்வொர்க் சரியாமல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள வோடோஃபோன் இந்தியா, “இதுஒரு தாற்காலிகமான பிரச்னை. நாங்கள் அதனை சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்துவிடுவோம். பிரச்னை சரியான பின்பு உங்களால் சிரமமின்றி மற்றவர்களுக்கு தொடர்பு கெள்ள முடியும்” என விளக்கம் கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com