\
பூந்தமல்லி: சமையலறையில் புகுந்த நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த விலங்கின ஆர்வலர்

பூந்தமல்லி: சமையலறையில் புகுந்த நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த விலங்கின ஆர்வலர்

பூந்தமல்லி: சமையலறையில் புகுந்த நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த விலங்கின ஆர்வலர்
Published on

பூந்தமல்லியில் சமையலறையில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீர்கள் வரும் வரை காத்திருக்காமல் பாம்பு பிடிக்கும் உபகரணத்தை வைத்து விலங்கின ஆர்வலர்  பிடித்தார்.

பூந்தமல்லி அடுத்த மேல் மாநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் சமையல் அறையில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் சமையலறையில் இருந்த பெண்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வருவதற்கு தாமதமாகும் என்பதால் பாம்பு பிடிக்கும் உபகரணத்தை கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர் ஜெயபால் என்பவர் லாவகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com