"விஜயகாந்த் வழியில் இயன்றதை செய்வோம்" - மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மழலைகள்..!

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த்க்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய உடன் அஞ்சலி செலுத்திய மழலைகள்.
tribute to vijayakanth
tribute to vijayakanthpt

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். சாமானியர்கள் தொடங்கி முதல்வர் வரை பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலகமே திரண்டு தீவுத்திடலுக்கு நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், சென்னை பூந்தமள்ளியில் பள்ளி மாணவர்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளி திரும்பினர்.

வெள்ளவேடு பகுதியில் உள்ள தனியார் மழலையார் பள்ளியில் படிக்கும் மழலைகள், விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா முரளிகிருஷ்ணன் தலைமை வகித்த நிலையில், மழலையர் பள்ளி சிறுவர் சிறுமியர்கள், ஆசிரியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கேப்டன் விஜயகாந்த்துக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள், மாணவர்கள் மத்தியில் கேப்டனை போல பிறருக்கு நம்மால் இயன்றதை செய்வோம் என்றும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

tribute to vijayakanth
ஸ்தம்பிக்கும் வடமாநிலங்கள்; புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com