ஊரடங்கை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பூந்தமல்லி நகராட்சி

ஊரடங்கை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பூந்தமல்லி நகராட்சி
ஊரடங்கை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பூந்தமல்லி நகராட்சி

முழு ஊரடங்கை பயன்படுத்தி பூந்தமல்லி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பூந்தமல்லி பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் முயற்சியால், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளின் முன்பாக வாகனங்களின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமன்றி பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணிகள் அமரும் இடம், தெருக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் 7 வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையின் பிரதான நுழைவு வாயிலான பூவிருந்தவல்லியில் ஊரடங்கை பயன்படுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com