பூந்தமல்லி: ஏரி முழுவதும் மலைபோல காலாவதியான ஐஸ்கிரீம் குப்பைகள்! நோய் அபாயத்தில் பொதுமக்கள்

பூந்தமல்லி அருகே கண்ணப்பாளையம் ஏரியில் மலைப்போல் பல நிறுவனங்களை சேர்ந்த காலாவதியான ஐஸ்கிரீம்கள் கொட்டப்பட்டுள்ளது
ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள்
ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள்புதிய தலைமுறை

பூந்தமல்லி அருகே கண்ணப்பாளையம் ஏரியில் மலைப்போல் பல நிறுவனங்களை சேர்ந்த காலாவதியான ஐஸ்கிரீம்கள் கொட்டப்பட்டுள்ளன.

பலகாலமாக இந்த ஏரியில், பல்வேறு குப்பைகளை அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்கள் கொட்டி வருவதால் ஏரி முழுவதும் குப்பைகளால் நிரம்பி உள்ளது.

இக்குப்பைகளை அப்பகுதியில் இருக்கும் ஆடு மாடுகள் சாப்பிட்டு வருவதால் அவைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்பு உள்ளது என்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நிலத்தடி நீரும் பாதிப்படையும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது,

ஏரியில் கொட்டப்படும் குப்பைகளைப் பற்றி வருவாய் துறை, உள்ளாட்சி துறை காவல் துறை என்று எந்த அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. கிட்டத்தட்ட சமூகவிரோதிகளின் கூடாரமாக இப்பகுதி மாறி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com