தமிழ்நாடு
”மக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் வெல்லும்” கமல் முன்னிலையில்கட்சியில் இணைந்த பொன்ராஜ்
”மக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் வெல்லும்” கமல் முன்னிலையில்கட்சியில் இணைந்த பொன்ராஜ்
அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் பொன்ராஜ் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் பொன்ராஜ் கட்சியில் இணைவதாவும் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பொன்ராஜ், “அப்துல்கலாம் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் இன்றுவரை தடுத்தது பாஜக அரசு. கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். அவர் கனவை நினைவாக்க தொடர்ந்து உழைப்பேன். வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக 120 தொகுதிகளில் ஜெயிக்கும். மாற்றம் இப்போது வராவிடில் எப்போதும் வராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.