\
ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு
Published on

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்கொடி உயர்த்திய நாளில் இருந்தே, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள், இந்நாள் அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் என ஒவ்வொருவராக தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலையில் 2 எம்.பி.க்கள், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர் பொன்னையன் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com