5 ஸ்டார் மதிப்பு பெற்ற பொன்மலை பணிமனை!

5 ஸ்டார் மதிப்பு பெற்ற பொன்மலை பணிமனை!

5 ஸ்டார் மதிப்பு பெற்ற பொன்மலை பணிமனை!
Published on

திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை சிறந்த மின் ஆற்றல் திறனுக்கான 5 ஸ்டார் மதிப்பீட்டினை பெற்றிருக்கிறது.

1897ல் நாகப்பட்டினத்தில் நீராவி என்ஜின்களுக்காக நிறுவப்பட்ட பொன்மலை பணிமனை, 1928ஆம் ஆண்டிலிருந்து திருச்சியில் பொன்மலையில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே-ல் பிரசித்தி பெற்ற பணிமனையாக விளங்கும் இது, பல்வேறு தரப்பட்ட ரயில் பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதில் நீராவி என்ஜின்களை தயாரிப்பதும், டீசல் மற்றும் நீராவி என்ஜின்களை பழுது பார்ப்பதும், சரக்கு பெட்டிகளை தயாரிப்பதும் மற்றும் அனைத்து பயணி மற்றும் சரக்கு ரயில் பெட்டிகளை பழுது பார்ப்பதும் முக்கிய பங்காகும். 

இந்நிலையில் மின்சக்தி திறனை மேம்படுத்தி மேலும் ஒரு சாதனையை பொன்மலை பணிமனை புரிந்துள்ளது. இது 2014-15ஆம் ஆண்டில் 74,37,390 ஆக இருந்த மின் அலகினை, 2016-17 ஆண்டில் 58,22,050 ஆக குறைத்துள்ளது. அதேபோல் 2014-15ல் 131 டன் நிலக்கரி பயன்பாட்டை, 2016-17 இல் வெறும் 20 டன் ஆக குறைத்து, மின் இயந்திரங்களை இலகுவாக பயன்படுத்தி மின் சக்தியை மிச்சப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2016-17ஆம் ஆண்டில் ரூ.1.16 கோடி சேமித்து சாதனை புரிந்தது. இதற்காக இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து 2017ஆம் ஆண்டு சிறந்த ரயில்வே பணிமனைக்கான விருதினை பொன்மலை பெற்றது. இந்த நிலையில், மேலும் ஒரு தகுதியாக ‘பீ 5 ஸ்டார்’ மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com