குமரி: டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற தேவாலங்களில் பொங்கலிட்டு வழிபாடு!

குமரி: டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற தேவாலங்களில் பொங்கலிட்டு வழிபாடு!
குமரி: டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற தேவாலங்களில் பொங்கலிட்டு வழிபாடு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஊர் மக்கள் திரண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை வெற்றி பெற இறைவனை இந்த நாளில் வேண்டுவதாக தெரிவித்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள்தோறும் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் ஊர் மக்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் இன்று பொங்கலிட முடியுமா என்ற சந்தேகத்தில் பெண்கள் காணப்பட்டனர். ஆனால், இன்று அதிகாலை முதல் மழை பெய்யாததால் ஏராளமானோர் மகிழ்ச்சியோடு தங்கள் பகுதிகளில் பொங்கலிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்தின் முன்பு நூற்றுக் கணக்கானோர் திரண்டு பொங்கலிட்டனர். அதிகாலையிலேயே சிறியோர் முதல் முதியோர் வரை ஆண்களும் பெண்களும் ஒன்றுகூடி பொங்கலிட்ட தோடு விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயம் செழிப்பதற்காகவும் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை வெற்றிபெற தங்கள் பொங்கல் நிகழ்ச்சி மூலம் இறைவனை வேண்டுவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com