தமிழ்நாடு
பொங்கல் பொங்கட்டும்.. மகிழ்ச்சி தங்கட்டும்... சசிகலா வாழ்த்து
பொங்கல் பொங்கட்டும்.. மகிழ்ச்சி தங்கட்டும்... சசிகலா வாழ்த்து
பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சசிகலா
பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரது வீட்டிலும் பொங்கல் பொங்க வேண்டும் என்றும் தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி தங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனவும் பொங்கல் நன்னாளில் தமிழர்களின் வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.