’தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது!’- மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

’தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது!’- மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
’தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது!’- மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

தைத்திருநாளையொட்டி,’தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது’ என தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.

இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் சிறப்பாக தொடங்கியிருக்கிறது. தமிழர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தந்த மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் மாநில மொழிகளில் ட்வீட் செய்வது பிரதமர் மோடியின் வழக்கம். அந்தவகையில், இன்று தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், ‘’தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com