பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று தொடக்கம்
பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து விடப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான 29 முன்பதிவு மையங்கள் இன்று தொடங்கப்படுகின்ற‌ன.

சென்னை கோயம்பேட்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மையங்களை தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக 11 ஆயிரத்து 270 சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 3 நாட்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, அடையாறு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி என 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 300 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணிகள் இம்மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் WWW.TNSTC.IN என்ற வலைத்தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com