பொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்கான பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜனவரி 11 முதல் 16 வரை சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன் பதிவு மையத்தை இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து,டிக்கெட் முன்பதிவை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே நகர், மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோயம்பேட்டில் 26 முன்பதிவு கவுண்டர்களும், தாம்பரத்தில் 2, பூந்தமல்லி, மாதவரத்தில் தலா ஒன்று முன் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் மற்ற இடங்களிலிருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

www.tnstc.in மற்றும் www.redbus.in, www.paytm.comல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com