பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தேதி வெளியீடு

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தேதி வெளியீடு

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தேதி வெளியீடு
Published on

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு பொங்கலுக்கு மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், பேருந்து நிலையங்களில் சிறப்பு முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 26, தாம்பரத்தில் 2, பூந்தமல்லி மாதவரத்தில் தலா ஒன்று என முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

www.tnstc.in மற்றும் www.redbus.in, www.paytm.comல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 11 முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 11 முதல் 14 வரை நாள்தோறும் இயக்கப்படும் 2275 பேருந்துகளுடன் 5163 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதாவரத்திலிருந்தும், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்தும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், கும்பகோணம் ஆகிய வழியாக செல்லும் பேருந்துகள் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்தும், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் விக்கிரவாண்டி, பண்ரூட்டி, கும்பகோணம், தஞ்சை பேருந்துகள் தாம்பரத்திலிருந்தும் செல்லும். மற்ற ஊர்களுக்கு செல்லும் அதிகப்படியான பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகே நகரில் இருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவுள்ளதாகவும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு இருந்தால் மக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com