\
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
Published on: 

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விடுமுறையை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். இதையடுத்து கட்டாய விடுமுறை பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் பண்டிகையைச் சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com