பொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை விட்டு வாரச் சந்தைகளில் ஆடு விற்பனை கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 10 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆனது. இன்று போச்சம்பள்ளி சந்தையில் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் விற்பனையானது. 

இதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள நாட்றம்பள்ளி வாரச்சந்தை, காரிமங்கலம் வாரச்சந்தை ஆகியவற்றில் கடந்த வாரத்தில் மட்டும் 15 கோடி வரையில் ஆடுகள் விற்பனையானது. ஆந்திரா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில், விற்பனைக்காக இருமலில் இருந்தும் ஆடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாரச்சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கித் சென்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஆடு விற்பனை அதிகரித்துள்ளதால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இந்த வாரம் பொங்கல் என்பதால் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகின. அதிக அளவு வியாபாரிகள் வந்திருந்ததால் ஆடுகளை வாங்கி டெம்போக்களில் ஏற்றி சென்றனர். இதனால் வாரச்சந்தையில் சராசரி கூட்டத்தைவிட அதிக அளவு கூட்டமாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com