இன்று முதல் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

இன்று முதல் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

இன்று முதல் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
Published on

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.

பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், பயனாளர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெற வருவோர், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com