தமிழ்நாடு
பொங்கல்பரிசை ஜனவரி 25 வரை பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல்பரிசை ஜனவரி 25 வரை பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
13ஆம் தேதிவரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிறைய குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டிருப்பதால் பரிசுத் தொகுப்பை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு ஜனவரி 18 முதல் 25ஆம் தேதிவரை ரூ. 2500 மற்றும் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.