தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு
பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
வருகிற 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ள நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம்.