கள்ளக்காதல்: தொழிலதிபரை கொன்றது எப்படி?

கள்ளக்காதல்: தொழிலதிபரை கொன்றது எப்படி?
கள்ளக்காதல்: தொழிலதிபரை கொன்றது எப்படி?

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க தொழிலதிபரைக் கொன்றது எப்படி என்று கைது செய்யப்பட்ட பாபு, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் (40). இவர் தொழில் தொடங்க புதுச்சேரி வந்தார். ரெட்டியார்பாளையத்தில் மனைவி ஜெயந்தி (35) மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார். விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகளை செய்தார். இந்த வேலைகளை, புதுச்சேரியை சேர்ந்த பாபு என்ற ஷேக் முகமது (40) என்பவர் கவனித்து வந்தார். இவருக்கும் ஜெயந்திக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது விவேக்குக்கு தெரிய வந்ததும் கணவன் -மனைவிக்குள் பிரச்னை. பின்னர் பாபும் ஜெயந்தியும் சேர்ந்து விவேக்கை கொலை செய்துவிட்டு தெரியாதது போல நாடகமாடினர். இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாபு போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

விவேக் பிரசாத், புதுச்சேரி வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தொடங்கும் தொழிற்சாலை பணிகளை என்னிடம் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. விவேக் இல்லாத நேரம் தனியாக சந்தித்து வந்தோம். ஒருகட்டத்தில் விவேக்கிற்கு சந்தேகம் வந்தது. ஜெயந்தியை கண்டித்துள்ளார். இதுபற்றி ஜெயந்தி என்னிடம் சொன்னார். இதனால் முன்பு போல் அவரை சந்திப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. விவேக் பிரசாத்தை கொன்றால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொன்னார் ஜெயந்தி. அவரே சொல்கிறாரே என்று நானும் சம்மதித்து அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

மே1-ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் கட்டுமானப் பணி நடக்கவில்லை. கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு விவேக் வந்தார். அங்கு நான் விவேக்கை கத்தியால் குத்தினேன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் துடிதுடித்து இறந்தார். உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, கழிவறை தொட்டியில் போட்டு மறைத்தேன்.
விவேக் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசை நம்ப வைக்க அவரது மோட்டார் சைக்கிளை வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் விட்டு விட்டு ஹெல்மெட்டை கடலில் வீசினேன். போலீசார் என்னிடம் விசாரித்தனர். முதலில் மறுத்தேன். போலீசார் தீவிரம் காட்டியதால் தலைமறைவானேன். இந்தநிலையில் சுல்தான்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com